மூலிகைகள்

1) மூலிகையின் பெயர் -: தும்பை.

2) தாவரப்பெயர் -: LEUCAS ASPERA.

3) தாவரக்குடும்பம் -: LABIATACEAE

4) பயன் தரும் பாகங்கள் -: இலை, பூ மற்றும் வேர்முதலியன.

5) வகைகள் -: தும்பை, பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, பேய்தும்பை, கழுதைத்தும்பை, கசப்புத்தும்பை, கவிழ்தும்பை, மற்றும் மஞ்சள்தும்பை.

6) தாவர அமைப்பு -: தும்பைக்கு எல்லாவகை மண்ணும் ஏற்றது. இந்தச்செடி வறண்ட நிலங்களில் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரம் வரை உள்ள இடங்களில் நன்கு வளரும் தாவரம். ஒரு அடிமுதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. கணுக்குருத்து இரு கிளைகளாக இலைக்கோணத்தில் பிரிந்திருக்கும். இலைகள் நீளமாகவும் இலைகளுக்கு மேலும் கீழும் பூக்களும் அமைந்திருக்கும்.

மலர்கள் தூய வெள்ளை நிறமாக ஒரே இதழ்விட்டு ஒரு சிறிய மொட்டு இதழின் நேராக நிற்கும். ஐந்து இதழ்களை உடையது. அடியில் இவை இணைந்து குழல் வடிவமாயிருக்கும் மகரந்த வட்டம் தாதிழைகளை உடையது இதில் இரண்டு உயரமானவை. சூல் தண்டு நீண்டது. சூலக வட்டம் நான்கு பிரிவானது. இலைக்குத் தனிவாசனை உண்டு. நட்ட ஆறுமாத த்தில் பூத்து வடும். இவை விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

7) முக்கிய வேதியப் பொருட்கள் -: இரண்டு ஸ்டீரால்கள், இரண்டு ஆல்கலாய்டுகள், காளக்டோஸ், ஒலியனாவிக் அமிலம், உர்காலிக் அமிலம் மற்றும் பீட்டா சிட்டோஸ்டீரால்.

8) மருத்துவப் பயன்கள்

(1) அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து உள்ளுக்கத் தர விக்கல் நீங்கும்.

(2) தும்பை இலையையும், மிளகையும் அறைத்து உள்ளுக்குக் கொடுத்து, வெளியிலும் பூச விசம் இறங்கும்.

(3) தும்பை இலையையும் தேள் கொடுக்கு இலையையும் அரைத்துத் தரத் தேள் கடி விசம் நீங்கும்.

(4) தும்பை வேரையும், மருக்காரை வேரையும் அரைத்து உடலில் பூசிக் குளிக்க விசம் இறங்கும்.

(5) தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்துக் கொடுத்துப் பசும் பால் பருகிவர ஆண்மை அதிகரிக்கும்.

(6) தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஆறவைத்து உலர்த்திச் சூரணம் செய்து கொடுத்து வர இதயப் பலவீனம் நீங்கும். சுரத்திற்குப் பின் ஏற்பட்ட சோர்வு தீரும். பசி அதிகரிக்கும். காமாலை குணமாகும். பித்த மயக்கம், வாந்தி குணமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

(7) தும்பைச் சாறு 200 மி.லி. வெங்காயச் சாறு 100 மி.லி. பசு நெய் 150 மி லி. ஆமணுக்கு நெய் 150 மி.லி. கலந்து காய்ச்சி வடிகட்டிக் குழந்தைகளுக்குக் கால் உச்சிக் கரண்டியளவு கொடுத்து வர மாந்தம், கணை தீரும். இருமல், இளைப்பு மாறும். மலர்ச்சிக்கல் நீங்கும். வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளிப்படும். உடல் சூடுதணிந்து குழந்தை ஆரோக்கியமாய் வளரும்.

(8) பெருந்தும்பைச் சாறு மோரில் கலந்து தரச் செரியாமை, கழிச்சல், மந்தம் நீங்கும்.

(9) தும்பைப் பூவையும், ஊமத்தம் பூவையும் அரைத்துப் புங்கு நெய்யில் கலந்து காய்ச்சி வடித்துக் காதிற்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தி வரக்காதுப் புண், காதில் சீழ் வடிதல், காது இரைச்சல் தீரும்.

(10) தும்பைப் பூவையும், பெருங்காயத்தையிம் அரைத்துக் கடுகெண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடித்து வைத்ததுக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.

(11) தும்பைச் சாற்றைத் தேனில் கலந்து சுட வைத்துக் குழந்தைகளுக்குப் புகட்ட இசிவு நீங்கும்.

(12) தும்பைச்சாறு 200 மி.லி. கழுதை மூத்திரம் 100 மி.லி. பசுநெய் 200 மி.லி. கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வடித்து உச்சிக் கரண்டியளவு உள்ளுக்குக் கொடுத்து, வெளியிலும் பூசிவரக் கிராந்தி புண் குணமாகும்.

(13) தும்பை இலைச்சாறு 10 மி.லி. எலுமிச்சம் பழச்சாறு 10 மி.லி. வெங்காயச்சாறு 5 மி.லி. எண்ணெய் 5 மி.லி. கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வரப் பெரும்பாடு நீஙுகும்.

(14) தும்பை இலை, உத்தாமணி இலை சம அளவு எடுத்து அரைத்துக் கோலிக் காயளவு பசும்பாலில் கொடுத்து வர மாத விலக்கினால் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும்.

(15) தும்பைப் பூவை வெள்ளாட்டுப் பாலில் கலந்து காயச்சி வடிகட்டிப் பாலைமட்டும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பது நாள் கொடுத்துவரக் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

(16) தும்பைப் பூவையும், ஒருமிளகையும் அரைத்து நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும்.

(17) தும்பைச் சாற்றையும்,பழச்சாற்றையும் சம அளவு எடுத்துக் கலந்து கொடுத்து வர ஆனந்த வாயு தீரும்.

(18) கழுதைத்தும்பை வேரை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூச அரையாப்பு குணமாகும்.

(19) தும்பைச்சாற்றைக் கண், காது, மூக்கில் நசியமாய்ப் பயன்படுத்தி உள்ளுக்கும் கொடுத்துக் கடிவாயிலும் பூசப் பாம்புக் கடி நஞ்சு தீரும்.

(20) கவிழ்தும்பைச் சாற்றைப் பசும் பாலில் கலந்து தர இரத்தக் கழிச்சல், சீதக் கழிச்சல், மூலக் கடுப்பு தீரும்.

(21) தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூச்ச் செய்யான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.

(22) தும்பை இலை, அவுரி இலை, மிளகு ஆகிய இவற்றைச்சேர்த்து அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, உடல் முழுவதும் பூசிவர எந்தக் கடிவிடமும் மாறும்.

(23) தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும். கண் பார்வை தெளிவடையும்.

(24) தும்பைச்சாறு 500 மி.லி. தேங்காய்எண்ணெய் 500 மி.லி.இரண்டையும் கலந்து காய்ச்சி வெளிப் பிரயோகமாகப் பயன்படுத்த வெட்டுக் காயம், ஆறாத இரண்ங்கள் ஆறும்.

(25) தும்பை வேர், சுண்டைவேர் சூரணம், இலப்பைப் பிண்ணாக்கு சுட்ட சாம்பல் மூன்றையும் சன்னமாய் சலித்து எடுத்து மூக்கில் பொடியாய் பயன் படுத்ததலைபாரம், தலைவலி, மூக்கு நீர்பாய்தல், தலையில் உள்ள ரோகங்கள் எல்லாம் மாறும்.

(26) தும்பை, குப்பைமேனி, கையான்தகரையைச்சூரண்ம் செய்து தொடர்ந்து கற்ப முறையில் சாப்பிட்டுவர உடலில் ஏற்படுகின்ற நோய்களும், மன விகாரமும் தீரும். நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும். நோயின்றி வாழலாம்.

(27) தும்பை வேர், சாரணைவேர், நாய்வேளை வேர், சித்துர மூல வேர், மிளகு, கழற்சுப் பருப்ப், கருஞ்சீரகம், பறங்கிப் பட்டை, பூண்டு ஆகிய இவற்றை ஓர் அளவாய் எடுத்துச் சூரணித்துத் தும்பைச் சாற்றில் பாவனை செய்து உலர்த்திப் பொடித்து ஒரு கிராம் அளவு பாலுல் அனுபானித்துத் தரச் சூலை, வாதம், முடக்கு வாதம், அண்டவாதம், வாயுக்குத்து, வயிற்றுப் பெருமல் தீரும்.

(28) சீரகம், காயம், வசம்பு ஆகியவற்றை வகைக்கு இருபது கிராம் எடுத்துத் தும்பைச் சாறு விட்டு அரைத்து மிளகளவு மாத்திரை செய்து குழந்தைகளின் உடல்வன்மை அறிந்து இஞ்சிச் சாறு, தேன், தாய்பால் ஏதாவது ஒன்றில் உரைத்துத் தரக் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற மாந்தம், அதனடியாய்ப் பிறக்கின்ற மாந்த வலிப்பு, இசிவு, பொருமல், செரியாக் கழிச்சல் தீரும்.

(29) தும்பைச் சாறு 30 மி.லி. துத்தி இலைச் சாறு 30 மி.லி. பசும் பாலில் கலந்து கொடுத்து வர உள் மூலம், புற மூலம், இரத்த மூலம் தீரும்.

(30) ஒமத்தை அரைத்துத் தும்பை இலைச் சாறு கூட்டித் தர மாந்தம், மாந்தக் கழிச்சல், வயிற்றுப் பொருமல் தூரும்.

(31) தும்பைச் சாறு; பொடுதலைச் சாற்றில் பெருங்காயத்தை உரசித் தரச் சுழிமாந்தம், போர்மாந்தம் நீங்கும்.

(32) தும்பைச் சாறு, கண்டங்கத்திரிச் சாறு இரண்டையும் தேனில் கலந்து தரக் கணை மாந்தம், மந்தாரக்கணம் தீரும். இருமல், இசிவு நீங்கும்.

(33) கவிழ் தும்பைச்சாறு, எண்ணெய் இரண்டையும் கலந்து மூன்று நாள் தர எலிக் கடி நஞ்சு தீரும்.

(34) தும்பை வேர், தைவேளை இலை, ஈர வெங்காயம் மூன்றையும் அரைத்து வைத்துக் கட்டப் பவுத்திரம் குணமாகும்.

(35) தும்பைப் பூ, தும்பை இலை, திப்பிலிச் சூரணத் ஆகிய இவற்றுடன் அக்கரகாரம் கலந்து தேனில் குழைத்துத் தரத் தொண்டைச் சதை வளர்ச்சி கட்டுப்படும்.

(36) தும்பை, மிளகு, வசம்பு, ஆகிய இம்மூன்றையும் அரைத்துத் துணியில் பொட்டலம் கட்டி நசியம் செய்யச் சன்னி தீரும்.

(37) தும்பைச் சாற்றை மூக்கில் நசியமிடப் பாம்புக் கடி நஞ்சு தீரும்.

(38) தும்பைச் சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர் கோவை குணமாகும்.

(39) தும்பைப் பூவைத் தாய் பாலில் ஊறவைத்துக் கண்ணில் பிளியச் சன்னி தீரும்.

(40) தும்பைப் பூவைப் பசும்பால் விட்டரைத்து எண்ணெய்யில் கலந்து காய்ச்சித் தலை முழுகி வரத் தலைபாரம், ஒற்றைதுதலைவலி,மூக்கடைப்பு, நீரேற்றம் நீங்கும்.

(41) பல் முளைக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் பேதியைத் தடுக்கப் பெருந்தும்பை இலைக் குடிநீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவரலாம்.

(42) தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்பு கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குழித்துவரச் சரங்கு, சோறி, நமச்சல் தீரும்.

(43) தும்பைச் செடியைஅரைத்துத் தேமல் உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவரத் தேமல் குணமாகும்.

(44) தும்பைக் குடி நீர் செய்து தர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், மந்தம் தீரும்.

(45) தும்பைச் சாற்றைக் கண்ணிற்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் கண் பூ மாறும்.

(46) தும்பை இலையை அரைத்துக் கற்பமாக்கி எருமை மோரில் கலந்து பத்து நாள் தரச்சுக்கிலமேகம் தீரும்.

(47) தும்பை இலை, துளசி இலை, இஞ்சி வகைக்குச் சம எடையும், இதறுகு இரு மடங்கு பூண்டும் எடுத்து அரைத்துச் சிற்றாமணுக்கு இலையில் வைத்துச் சுருட்டி நெருப்பில் காட்டி வெதும்பிச்சாறு பிழிந்து துட்டெடை தரப் புற இசிவு தீரும்.

(48) தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும்.

(49) தும்பைச் சாறும், விளக்கெண்ணெய்யும் கலந்து தர வயிற்றில் உள்ள கிருமிகள் வெளிப்படும்.

(50) கவிள் தும்பை வேர், நத்தைச் சூரி வேர் இரண்டையும் அரைத்து வெண்ணெயில் கலந்து தர மூல நோய் தூரும்.

(51) ஆண்பனைக் குருத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிப் பாலில் கலந்து தர அன்றே தீட்டாவாள். அன்று இரவு சாப்பிடாமல் இருந்து மறுநாள் காலை கவிழ்தும்பைப் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சி வடக்கு முகமாய் இருந்து குடிக்க மலட்டு தன்மை நீங்கி ஆண்குழந்தை பிறக்கும்.

(52) கவிழ் தும்பை வேரைப் பிடுங்கிக் கர்பிணியின் நெற்றியில் குளிசமாடி இருக்கக் குழந்தை சிரம மில்லாமல் பிறக்கும். சுக பிரசவமாகும்.

(53) தும்பை இலைச் சாறு, பூனைக் காஞ்சொரி இலைச் சாறும் கலந்து தரப் பாம்புக் கடி நஞ்சு தீரும்.

(54) கவிழ் தும்பையை உலர்த்திச் சூரணமாக்கிக் குருவை அரிசி மா கலந்து கருப்பட்டி சேர்த்துப் பிசைந்து தர பெரும்பாடு தீரும்.

(55) தும்பை இலை, சாரணை இலை, ஓருள்ளிப் பூடு, வசம்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துத் துணியில் முடிந்து நாசியில் பிழியப் பைத்தியம் தீரும்.

(56) கவிழ்தும்பை வேர், கறி மஞ்சள் இரண்டையும் சம அளவெடுத்து அரைத்துத் துணியில் தடவித் திரியாக்கி நெருப்பில் கொளுத்திப் புகைப் பிடிக்கச் சிரசு நோய்கள் எல்லாம் தீரும்.

................................................................................................................
தமிழ்ப் பெயர் – கோவை

தாவரவியல் பெயர் - Coccinia indica

வேறு தமிழ்ப் பெயர் - தொண்டைக் கொடி

சிறப்பு –  கோவைப் பழம், குட்ட நோய் தீர்க்கவல்லது!
...............................................................................................................
கொடி ரோஜா

இலையிலிருந்து தயரிக்கப்படும் டீ , சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து ; இந்த டீ இரத்த அழுத்த நோய்க்கும் மருந்தாகிறது; அழகு மலர்கள் ஆம்லெட்டில் சேர்க்கப்படுகின்றன ; இம்மூலிகை வலி நீக்கியாகச் செயல்படுகிறது
...............................................................................................................
 தமிழ்ப் பெயர் – கிரந்தி நயாகம்

தாவரவியல் பெயர் - Ruellia tuberose

வேறு தமிழ்ப் பெயர் – பட்டாசுக்காய்ச் செடி

சிறப்பு –  நாள்பட்ட ஆறாத கிரந்திப்புண்ணுக்கு இதன் இலைச்சாறு மருந்து
...............................................................................................................
!: தமிழ்ப் பெயர் – குப்பைமேனி

தாவரவியல் பெயர் - Acalypha indica

சிறப்பு –  இலைச்சாறு பாம்புக்கடி விஷத்தை முறிக்க வல்லது! தமிழ்ப் பெயர் – தரைப்பசலை
...............................................................................................................
தாவரவியல் பெயர் - Talinum paniculatum

வேறு தமிழ்ப் பெயரகள் – சிலோன் பசலை; சிலோன் பசலைக் கீரை

சிறப்பு – நிமோனியாக் காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது!
...............................................................................................................
 தமிழ்ப் பெயர் – தூதுவளை

தாவரவியல் பெயர் - Solanum trilobatum’

வேறு தமிழ்ப் பெயரகள் – தூதுவேளை; தூது; தூதுளம் ;தூதுளை

சிறப்பு – இருமல் சளிக்குப் பரம்பரை மருந்து!
...............................................................................................................
: தமிழ்ப் பெயர் – நாய்க்கடுகு

தாவரவியல் பெயர் - Cleome viscosa

வேறு தமிழ்ப் பெயர் -  நாய்வேளை

சிறப்பு – விதை ,குடல் புழுக்களைக் கொல்லும் மருந்து!
...............................................................................................................
தமிழ்ப் பெயர் – நெய்ச்சிட்டி

தாவரவியல் பெயர் - Conyza floribunda

வேறு தமிழ்ப் பெயர்கள் – நெய்ச் சட்டி ; நெய்ச்செட்டி

சிறப்பு – சிறுநீரகப் பாதைகளின் நோய்களைக் குணமாக்க வல்லது      ...............................................................................................................
 தமிழ்ப் பெயர் – தேன்பூச்சி மரம்

தாவரவியல் பெயர் – Guazuma ulmifolia

வேறு தமிழ்ப் பெயர்கள் – தேபூச்சி மரம் ;தேன் மரம் ;தேன் பச்சை ;காட்டு உத்ராக்ஷம் .

சிறப்பு – புற்றுநோய் எதிர்ப்புத் திறன் கொண்டது !
...............................................................................................................
: தமிழ்ப் பெயர் – சீமை நாயுருவி , எழுத்தாணிப்பூண்டு

தாவரவியல் பெயர் – stachytarpheta jamaicensis

சிறப்பு – இரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் குணம் இதன் இலைக்கு உண்டு !
...............................................................................................................
: தமிழ்ப் பெயர் – கருவாகை

தாவரவியல் பெயர் – ALBIZIA  ODORATISSIMA

சிறப்பு – குட்ட நோய் தீர்க்கும் மருந்துக்கு இதன் பட்டை பயன்படுகிறது !
...............................................................................................................
தமிழ்ப் பெயர் –  இயல் வாகை

தாவரவியல் பெயர் –  Peltophorum pterocarpum  

சிறப்பு –  குடல் நோய்களுக்கு மருந்தாகும் தாவரம் !
...............................................................................................................      
தமிழ்ப் பெயர் – சீமை வாகை            

தாவரவியல் பெயர் –  Enterolobium saman

சிறப்பு – வேர்க் கசாயம், வயிற்றுப் புற்று நோய்க்கு மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது!
...............................................................................................................
 தமிழ்ப் பெயர் – மகிழ மரம்

வேறு தமிழ்ப் பெயர் - இலஞ்சி

தாவரவியல் பெயர் –  Mimusops elengi

சிறப்பு – பூக் கசாயம் இதய நோய்க்கு மருந்து
...............................................................................................................
: தமிழ்ப் பெயர் – முசு முசுக்கை

வேறு தமிழ்ப் பெயர் – ஐலேயம் ; இரு குரங்கின் கை

தாவரவியல் பெயர் –  mukia maderaspatana    

சிறப்பு – சுவாசப் பையில் ஏற்படும் புண்ணை ஆற்றவல்ல மூலிகை
...............................................................................................................
 தமிழ்ப் பெயர் – உதிய மரம்

தாவரவியல் பெயர் – Lannea coromandelica

சிறப்பு – குட்ட நோய்க்கு இம் மரத்திலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள்
...............................................................................................................
: அடுக்குச் செம்பருத்தி

தாவரவியல் பெயர் – Double Red Hibiscus sinensis

சிறப்பு – கல்லீரல் நோய்களுக்கு இது மருந்தாகிறது!
...............................................................................................................
 கொழுக்கட்டை  மந்தாரை

தாவரவியல் பெயர் – Bauhinia tomentosa

சிறப்பு – மரப்பட்டைக் கசாயம் கல்லீரல் எரிச்சல் நோயைக்  குணமாக்குகிறது !
...............................................................................................................
 வேலி மூங்கில்

தாவரவியல் பெயர் – Justicia betonica

சிறப்பு – குடலில் ஏற்படும் வாயு நோய்களுக்கு இத் தாவரம் மருந்தாகிறது
...............................................................................................................
தண்ணீர்க்காய் மரம்

தாவரவியல் பெயர் – Spathodea campanulata
 
சிறப்பு – இலைக்கசாயம் மலேரியாக் காய்ச்சலுக்கு மருந்து!
...............................................................................................................
 சுடுகாட்டுச் சூரிய காந்தி

தாவரவியல் பெயர் – Sphagneticola trilobata

சிறப்பு – சிறுநீர் கழிப்பது தொடர்பான நோய்களைத் தீர்க்கும் மூலிகை !
...............................................................................................................
சர்க்கரைத் துளசி

தாவரவியல் பெயர் – Stevia rebaudiana !

சிறப்பு – இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மூலிகை !
...............................................................................................................
: தைவேளை

வேறு பெயர்கள் – நல்வேளை,வேளை, அசகந்தா

தாவரவியல் பெயர் –  Cleome gynandra    !

சிறப்பு –  இலை , பூக்கள் சமைத்து உண்ணத்தக்கவை; புற்றுநோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட தாவரம்!
...............................................................................................................
ஆதொண்டை

தாவரவியல் பெயர் –  CAPPARIS HORRIDA

சிறப்பு –  ஆஸ்துமாவைக் குணமாக்கும் மூலிகை
...............................................................................................................
வில்வம்

மறு பெயர்கள் -  கூவிளம், கூவிளை

தாவரவியல் பெயர் –  Aegle marmelos

சிறப்பு – இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட இம் மரத்து எண்ணெய் பாக்டீரியாக்களைக் கொல்ல வல்லது
...............................................................................................................
 கரிசலாங்கண்ணி

வேறு தமிழ்ப் பெயர்கள் - கையாந்தகரை, கரப்பான், கரிசாலை , கைகேசி, கைவீசி, கரியசாலை, கரிப்பான், கையான்.

தாவரவியல் பெயர் –  Eclipta  prostrata

சிறப்பு – இலைக் கசாயம் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும்
...............................................................................................................
கிலுகிலுப்பை

வேறு தமிழ்ப் பெயர்கள் - சணல்  ; சணப்பு ; பூனை விதை ; சங்குநிதி

தாவரவியல் பெயர் –  Crotalaria verrucosa

சிறப்பு – இலைச் சாறு பித்த மயக்கத்தைப் போக்கும்   !
...............................................................................................................
 நெருஞ்சில்

தாவரவியல் பெயர் –  Tribulus terrestris

சிறப்பு – விறைப்பின்மை நோய்க்கு அருமருந்து!
...............................................................................................................
 தமிழ்ப் பெயர் – வசந்தராணி

தாவரவியல் பெயர் – Tabebuia rosea

சிறப்பு – இதன் வேர் கர்ப்ப்பைப் புற்றுநோய்க்கு மருந்தாகிறது !
...............................................................................................................
தமிழ்ப் பெயர் – யானை நெருஞ்சில்

தாவரவியல் பெயர் –Pedalium murex

சிறப்பு – காம இச்சையைத் தூண்டும் மூலிகை!
...............................................................................................................
 தமிழ்ப் பெயர் –  ஓரிதழ்த் தாமரை

தாவரவியல் பெயர் –  Lonidium suffruticosum

சிறப்பு – உடலுக்கு வலுவைச் சேர்த்துக் காம இச்சையைத் தூண்டும் மூலிகை !
...............................................................................................................
 தமிழ்ப் பெயர் – சீமை அகத்தி

வேறு தமிழ்ப் பெயர்கள் - நில ஆவாரை, நில வாகை ,புதர் மெழுகுவர்த்திப் பூ , காட்டுச் சென்னா,  ஏழு தங்க மெழுகுவர்த்தி .

தாவரவியல் பெயர் –  Cassia angustifolia

சிறப்பு – சொறிசிறங்கு மற்றும் தோல்வியாதிகளுக்கு இதன் இலை மருந்து !
...............................................................................................................
 தமிழ்ப் பெயர் – இரத்தின மாலை

தாவரவியல் பெயர் –   Indigofera linifolia

சிறப்பு – கல்லீரல் நோய் தீர்க்கும்  மூலிகை இது !
...............................................................................................................
 தமிழ்ப் பெயர் – பெருந்திராய்

வேறு தமிழ்ப் பெயர் – திராய்

தாவரவியல் பெயர் –  Glinus oppositifolius

சிறப்பு – தோலில் வெள்ளை படர்தல் நோய்க்கு (leucoderma) மருந்தாகப்  பயன்படுகிறது!

 தமிழ்ப் பெயர் – முடியன் பச்சை

தாவரவியல் பெயர் –  Synedrella nodiflora

சிறப்பு – வலிப்பு நோய் தீர்க்கும் மூலிகை!
...............................................................................................................
தமிழ்ப் பெயர் – புல்லாமணக்கு

தாவரவியல் பெயர் –  Microstachys chamaelea

சிறப்பு – தாவரச் சாறு ,சிபிலிஸ் எனப்படும் மேகப் புண்களுக்கு மருந்து!
...............................................................................................................
 தமிழ்ப் பெயர் – காசுக்கொடி

தாவரவியல் பெயர் –  Alysicarpus monilifer

சிறப்பு – இதன் இலை , மஞ்சள் கமாலைக்கு மருந்தாகிறது !
...............................................................................................................
: தமிழ்ப் பெயர் – மலைமுருங்கை

வேறு தமிழ்ப் பெயர் – செங்கிடை

தாவரவியல் பெயர் –  Sesbania  aculeate

சிறப்பு –  தோலின் வட்டப்புழு நோய்க்கு இதன் விதை மருந்து !
...............................................................................................................
 தமிழ்ப் பெயர் – ஊசிப்பாலை

தாவரவியல் பெயர் –  Oxystelma esculentum

சிறப்பு –  இதன் இலையை மென்றால் வாய்ப்புண் ஆறும்!
...............................................................................................................
 தமிழ்ப் பெயர் – சிறுதேள் கொடுக்கு

தாவரவியல் பெயர் –  Heliotropium curassavicum

சிறப்பு – தாவரக் கசாயம் பால்வினை(Venereal Disease) நோய்க்கு மருந்து  !
...............................................................................................................
 தமிழ்ப் பெயர் – சிறுபுள்ளடி

தாவரவியல் பெயர் –  Desmodium triphlorum

சிறப்பு – நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி தரும் மூலிகை!
...............................................................................................................
           இலைப் பாசி

தாவரவியல் பெயர் – Lemna minor

சிறப்பு –இலைப்பாசியிலிருந்து ‘டிஞ்சர்’ தயாரித்து நாள்பட்ட மூக்கடைப்பைப் போக்குகின்றனர் !
...............................................................................................................
கவிழ் தும்பை

பிற தமிழ்ப் பெயர்கள் – அதோமுகி ; கழுதைத் தும்பை

தாவரவியல் பெயர் -  Trichodesma indicum

சிறப்பு – இலை , வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சாயம் வயிற்றுப் போக்கையும் சில தோல் நோய்களையும் குணப்படுத்துகிறது!
...............................................................................................................
 குணுக்குத் தூக்கி

தாவரவியல் பெயர் - Micrococca mercurialis  !

சிறப்பு – இலை மஞ்சள் காலைக்கு மருந்து !
...............................................................................................................
 புலிச் சுவடுக் கீரை

வேறு தமிழ்ப் பெயர் – பூனைக்காலிக் கீரை

தாவரவியல் பெயர் - Ipomoea pes-tigridis

சிறப்பு – புண்களை ஆற்றவல்லது  !