தவ மையத்திற்காக ;


              மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய முறையான வாசி என்ற பிரணாயாமம் மருத்துவம் கற்பம் முப்பு இவைகளை முறையாக சித்தர்களால் கூறப்பட்ட பயன்பாட்டினை அடைவதின் மூலம்தான் மரணத்தை வெல்ல முடியும் என்பதை சித்தர்கள் நு£லின் மூலம் தெரிவித்துள்ளனர். சீவனை சிவனாக உணர வாசி பயிற்சியும் உடலில் வரும் நோய்களை தீர்க்க மருத்துவமும் உடல் திடகாத்திரம்மாக வைத்துக்கொள்ள கற்ப மருந்துகளும் நோய்களை தீர்க்கவும் உடல் திடகாத்திரமாக இருக்க செய்யவும் மரணம் இல்லா பெருவாழ் அளிக்கவள்ளது முப்பு இந்த அடிப்படைகளில் கொண்டு தவம் மையம் செயல்படும்.
தவம் மையத்தின் நோக்கம் சாமி சிவானந்தர் சித்த வேதத்தில் கூறி உள்ள கருத்துக்களையும் சித்தர்கள் அருளிய நு£ல்களில் கிடைக்கப்பெற்ற கருத்துக்களை சீவனை சிவனாக உணர்வும் தொகுக்கப்படுகிறது. ஆத்ம சகோரர்கள் சகோதரிகள் கடைதேர சாதனை செய்பவதற்க்காகவும் தவ மையம் உணர்ந்ததை முடிந்தவரை நு£ல்களை தொகுத்து தரப்படுகிறது. குறைகள் இருப்பின் தவ மையத்திற்கு சுட்டிகாட்டவும் பயன் இருப்பின் பயன்படுத்தி ஜீவன் நல்ல கதியை காண அழைக்கிறோம். சித்த வழியில் அகத்தியர் தவ மையம்.
இதற்குரிய தகுதி
  1. எந்த உயிர்களையும் கொல்லக்கூடாது எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் என்ன வேண்டும்.
  2. பிறர் மனைவி ஆசை தள்ளு. பிறர் பொருளை ஆசை தள்ளு.
  3. கன்னம் வைத்து திருடாதே. காமம் தள்ளு.
  4. மாயை தள்ளு தவறான நட்வு தள்ளு. தாம்பூலம் தள்ளு கஞ்சா, பொய் கோபம் தள்ளு.
இவைகளை நீக்கி தவ மையத்தின் ஆலோசனை பெறலாம்.

இவைகளை எல்லாம் பழகிவிட்டாலும் இந்த தவறுகளை குரு காணிக்கையாக தத்தம் செய்யவேண்டும். இப்பழக்கத்தைவிட்டவர்கள் சீவனை சிவனாக உணர தகுதியுடைவர்கள் கட்டணம் ஏதும் கிடையாது.