தவம் மருத்துவம் கற்பம் இவைகளுக்கு ஆதி வஸ்துவாக கருதப்படுவது முப்பு.
முப்பைக் கண்டார் மூப்பை யகன்றார்
முப்பைச் கண்டார் மெய்வினையற்றார்
முப்பைக் கண்டார் மோதக முற்றார்
முப்பைக் கண்டார் மொழிபரனாமே.
முப்பு என்றால் 3 உப்பு என்பதை கீழ்கண்ட செய்யுளில் விளக்கப்பட்டுள்ளது.
என்னவே வானத் திடியில் லொன்று
கன்னியமான கடல் தனி லொன்று
பொன்னெனப் பூத்த பூமியி லொன்று‘
முன்னவர் சொன்ன முப்பு விம்மூன்றே.
முப்புக்கு உதாரணம் முப்பொருளாய் உள்ளதை கவனிக்கவும்.
உப்பு, புளி, காரம்
பிரம்மா விஷ்ணு ருத்திரன்
ஒன்று அப்பொருளில் அடங்கியது அடி முடி.
உப்பு என்றால் ஆண், புளி என்றால் பெண், இவை இரண்டும் சேர்க்கும்போது கரு.
சூரிய கலை, சந்திர கலை, சுழிமுனை
மண், நீர், நெருப்பு
காற்றும் ஆகாயமும் கண்டறிய முடியாது உணரமுடியும்
முப்பூவால் வாசி வசமாகும்
வாசமுள்ள முப்பூவின் வாசந் தன்னை
மார்க்கமுடன் கண்டறிந்து கொண்டாயானால்
நேசமுள்ள வாசியடா வாசமாகி
நிலையான பூரணமுந் தான்தானாகி
பாசமுள்ள பலதொழிலுந் தான் தானாகி
பரைஞான கேசரியில் வாசமாகி
பேசவொண்ணா மவுனமதில் மவுனமாகி
பேரண்ட மானசில சூச்சங்கேளே
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானந் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே - திருமூலர்
உடம்பை வளர்க்கும் உபாயம் என்பது தவம், மருத்துவம், கற்பம் முப்பு போன்றவற்றை அறிதல் தான் உடம்பை வளர்க்கும் உபாயமாக கூறியுள்ளர்.
